இன்று முதல் விசேட பஸ் சேவைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார் .

ரயில் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.