இன்று முதல் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் அதிகரிப்பு

.இன்று முதல் உடன் அமலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100% அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இணங்க அதிகரிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வருடாந்த கலால் வரி, பாதுகாப்பு வைப்புத் தொகை மற்றும் தொழில்துறை அணுகலுக்கான ஒரு முறை கட்டணம் ஆகியவை அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.