இனந்தெரியாத நபர்களால் விவசாய நிலத்தில் சேதம்
-கிளிநொச்சி நிருபர்-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் விவசாயி ஒருவரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கவுப்பிபயிர்கள் இனந்தெரியாதோர்களால் வெட்டி வீசப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று குறித்த விவசாயியின் விவசாய நிலத்தின் காவல் வேலிகளை உடைத்து முள்ளுக்கம்பிகளை வெட்டி உட்சென்று பயிர்களை அழித்துள்ளனர்.
இச்சம்பவமானது தொடர்ச்சியாக பளை பிரதேசத்தில் இடம்பெற்றுவருவதாகவும் கடந்த ஆண்டும் அறுவடைக்கு தயார் ஆன 300மிளகாய் செடிகளும் வெட்டி வீசப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்