இந்த வருடம் இதுவரை 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில்,  23 பேர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேகாலப்பகுதியில்,  துப்பாக்கி சூடு காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், 273 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக  திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்