இந்தோனேசியாவில் பாரிய இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் நிலநடுக்கம், 43 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 மெக்னிடியூட் அளவில் கெபுலாவான் பட்டுவில் பதிவானது, அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்தில் 5.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்