இந்திய நிதி அமைச்சர் யாழிற்கு விஜயம்

 

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்திய கலாச்சார நிலையத்திற்கு வருகைதந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சியினை ஆரம்பித்துவைத்தார்.

இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர், வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ், மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபால சுந்தரன், மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்