
இந்திய தூதரக உயர்ஸ்தானிகர் – திருகோணமலை சிறார்கள் சந்திப்பு!
-கிண்ணியா நிருபர்-
‘ கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எதிர் வரும் ஏப்ரல் மாதம் சிறார்களாகிய நாங்கள் பாக்கு நீரிணையை 32km தூரத்தினை நீந்திக் கடந்து சாதணை படைத்தல் ‘ என்ற தொனிப் பொருளில் YANA நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 15 வயதிற்கு கீழ் உள்ள திருகோணமலையைச் சேர்ந்த சிறார்கள் மேற்படி விடயம் தொடர்பில் முதல் கட்டமாக இந்திய தூதரக உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜை சந்திக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது சுற்றுசூழல் பாதுகாப்பு, கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு, பிளாஸ்டிக் முகாமைத்தவம் தொடர்பான விழிப்புணர்வு, செயல் திட்டங்களை வட கிழக்கில் எதிர் வரும் காலங்களில் செயற்படுத்துவது தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இளம் சிறார்களின் இம்முயற்சியினைப் பாராட்டிய இந்திய தூதுவர், உயர்ஸ்தானிகர் ஆலயத்தினூடாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்களை மேற் கொள்வதற்கு தனது பூரன உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்திய தூதரக உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜை சந்திப்பதற்கான பூரன ஏற்பாடுகளையும் தொடர்பு ஒழுங்குகளையும் திருகோணமலை Trinco Aid நிறுவனம் செய்ததுடன் இச்சந்திப்பில் Trinco Aid இன் நிறுவனர், பணிப்பாளர், நிகழ்ச்சி முகாமையாளர் ஆகியோரும் YANA Swimming School இன் பணிப்பாளர் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
