
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே கலந்துரையாடல்
-யாழ் நிருபர்-
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன் போது ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
