இந்திய அரசியலமைப்பு தின அகில இலங்கை சிறுவர் ஓவியப்போட்டி
இந்திய அரசியலமைப்பு தினம் 2022ஐ முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
இங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தனித்துவம் வாய்ந்த கண்காட்சி மற்றும் செயலமர்வில் கழிவுப்பொருட்கள் மூலம் சூழலுக்கு இசைவான அழகிய படைப்புகளை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இச்சிறப்புமிக்க நன்னாளில் உயர் ஸ்தானிகர் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பின் சிற்பியான டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.