
இந்திய அணியின் திலக் வர்மா விலகல்
நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளிலிருந்து இந்திய அணியின் திலக் வர்மா விலகியுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அவர் குறித்த போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறுவை சிகிச்சை காயம் முழுமையாக குணமடைந்த பிறகு அவர் பயிற்சியைத் தொடங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனவரி 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இறுதி 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா விளையாடுவாரா என்பது, அவரது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
