இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து: 7 பேர் பலி

இந்தியா உத்தரகண்ட் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்கு பயணித்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் பகுதியில் விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானி உட்பட 7 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களில் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதுடன் அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை சேர்ந்த பயணிகளே குறித்த ஹெலிகாப்டரில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

 

  • Beta

Beta feature