இந்தியாவில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்தினூடாக வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்திய பெண் கைது!

-யாழ் நிருபர்-

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலிக்கு வந்த பெண்ணொருவர், தனது வயிற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை  பலாலி விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சையின் பின் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கொழும்பைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.