இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூடைகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மதிப்பில் ரூபாய் 69 இலட்சம் மதிப்புள்ள பீடி இலை மூடைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக கரையோர பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது இந்த மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .