இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தீப்பரவல்: 200 வீடுகள் சேதம்

இந்தியாவின் உத்தரபிரதேசம் பதாயுன் மாவட்டத்தில் உள்ள தப்பா ஜாம்னி கிராமத்தில் நேற்று புதன் கிழமை இரவு புயல் ஏற்பட்ட நிலையில் இதன் தாக்கத்தால் மின்மாற்றியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் காரணமாக 200 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த தீப்பரவல் தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இது வரை வெளிவரவில்லை.