இலங்கையின் சுற்றுலாத் துறையை இந்திய சந்தையில் மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் ஹெரிட்டன்ஸ் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ்(Heritance Hotels & Resorts), இந்திய நடிகை சாரா அலி கானுடன் இணைந்து புதிய விளம்பர மற்றும் சுற்றுலா பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் இயற்கை அழகு, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஆடம்பரமான சுற்றுலா அனுபவங்களை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும். சாரா அலி கானின் பிரபலத்தையும் சமூக ஊடக செல்வாக்கையும் பயன்படுத்தி, இந்தியாவில் குறிப்பாக இளம் பயணிகளிடையே இலங்கையை சுற்றுலா destination ஆக அறிமுகப்படுத்த Heritance திட்டமிட்டுள்ளது.
எட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ்(Aitken Spence Hotels) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹெரிட்டன்ஸ் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ்(Heritance Hotels & Resorts), இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயற்கை மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்த தங்குமிட அனுபவங்களை வழங்கி வருகிறது. கந்தலாமா, கண்டபொல மற்றும் தென் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதன் சுற்றுலா அனுபவங்கள் அமைந்துள்ளன.
இந்தியாவை இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகக் கொண்டு, இந்தியப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரபல நடிகர்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்களை பயன்படுத்தும் சுற்றுலா பிரசாரங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சாரா அலி கானுடனான இந்த கூட்டாண்மை, இலங்கையின் சுற்றுலா அனுபவங்களை இந்திய பார்வையாளர்களிடம் புதிய தலைமுறை டிஜிட்டல் ஊடகங்கள் வழியாக கொண்டு சேர்ப்பதற்கான Heritance நிறுவனத்தின் முயற்சியாக அமைந்துள்ளது.









