
இத்தாலி செல்ல முயன்ற 93 அகதிகள் மீட்பு
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாக கடந்த சனிக்கிழமை இரவு இத்தாலி செல்ல முயன்ற 3 படகுகளை அந்த நாட்டின் கடலோரா பொலிஸார் தடுத்து நிறுத்தி படகுகளில் இருந்த 93 அகதிகளை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில், துனிசிய தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஹூஸ்மெடின் ஜபாப்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு இதுபோன்ற மூன்று முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
