“இதய தாகமே இலக்கியம்” நூல் வெளியீட்டு விழா

-கல்முனை நிருபர்-

நாளை புதன் கிழமை தமிழ்மாமணி கலைமாறன் செ.லோகராஜா எழுதிய “இதய தாகமே இலக்கியம்” எனும் நூல் வெளியீட்டு விழா மூதூர் கிளிவெட்டி அமரர் தங்கத்துரை மண்டபத்தில் அதிபர் பா.கோணேஸ்வரராசா தலைமையில் பி.ப.2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால. சுகுமார் கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் க.அன்பழகன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இங்கு நூல் அறிமுக உரையினை ஈச்சிலம்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் கவியருவி பல.மதிபாலசிங்கம், நூல் நயவுரையினை ஓய்வு நிலை அதிபர் இரா.இரத்னசிங்கம் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.