இணையவழி விற்பனை மோசடி தொடர்பில் எச்சரிக்கை

இணையத்தளம் ஊடாக பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாக பொருள்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாள்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.