இட்லி கடை படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாகும் என அறிவிப்பு

தனுஷ் இயக்கத்தில் 4ஆவது திரைப்படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது.

இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தநிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான “என் பாட்டன் சாமி வரும்” நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.