இடிந்து வீழ்ந்த பாலம்: பாதிக்கப்பட்ட போக்குவரத்து

இரத்தினபுரி மாவட்டத்தில் ஹுலந்த ஓயா பாலம் சேமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று திங்கட்கிழமை காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்து பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளது. எனினும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த, தங்காலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.