ஆவணி அவிட்டம் 2024

ஆவணி அவிட்டம் 2024

ஆவணி அவிட்டம் 2024

💥ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.

💥ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.

💥ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பௌர்ணமியன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.

ஆவணி அவிட்டம் எப்போது

💥இந்தாண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ஆம் திகதி திங்கள் கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் அதிகாலை 4.32 மணி முதல் 5.20 வரை பிரம்ம முகூர்த்தம் நன்றாக உள்ளதாகவும், பிறகு பகல் 12 மணி முதல் 1 மணி வரையும் நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்தில் பூணூல் மாற்றி கொள்ளலாம். பகல் 1 மணி வரை எந்த நேரமும் சாதகமாக இருக்கும்.

ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம்

💥ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்று நான்கு வேதங்கள் உள்ளன. அசுரர்களால் வேதங்கள் திருடப்பட்டு, யாராலும் மீட்க முடியவில்லை. எனவே மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள் தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல ஆவணி அவிட்ட நாள் அன்று தான் வேதங்களை படிக்கத் தொடங்குவார்கள். இது உபகர்மா என்று கூறப்படுகிறது. இது பிராமண சமூகத்தில் மிகவும் முக்கியமான ஒரு நாள் மற்றும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

ஆவணி அவிட்டம் 2024

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்