-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை-கிண்ணியா புஹாரியடி சந்தியில் கிண்ணியாவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் விசித்திரமான முறையில் கடிகாரம் ஒன்றை பொருத்தியுள்ளார்.
கோர்ட் சூட் அணிந்து தானே வந்து குறித்த மணிக்கூட்டு கோபுரத்தை ரிபன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் புனரமைப்பின்றி காணப்பட்ட கிண்ணியா பிரதான வீதி சந்தியில் இக் கடிகாரம் குறித்த இளைஞனால் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக தனது பட்டச் சான்றிதழுடன் கோர்ட் சூட் அணிந்து மாம்பழம் விற்பனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.