
ஆலயமொன்றில் குலதெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்
யாழ்ப்பாணம், நீர்வேலி பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்த வயோதிபப் பெண் டிப்பர் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி (வயது 73) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கோவிலில் குலதெய்வத்தை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த டிப்பர் ஒன்று சாலையை விட்டு விலகி குறித்த பெண் மீது மோதியது.
டிப்பர் மோதிய பெண் கீழே விழுந்து சுமார் 30 மீற்றர் தூரம் டிப்பருடன் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதியை கைது செய்த கோப்பாய் பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
