வாகன இலக்கத் தகடுகளுக்கான தற்போதைய நிலுவையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் தீர்க்க எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்ததாரர் மூலம் மார்ச் 10ஆம் திகதி முதல் இதுவரை சுமார் 62,000 இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான சுமார் 32,000 இலக்கத் தகடுகள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிலுவைகள் தீர்க்கப்பட்ட பின்னர், வாகனம் பதிவு செய்யப்பட்ட சுமார் ஏழு நாட்களுக்குள் இலக்கத் தகடு வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன்புறம் மற்றும் பின்புறம் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படும் எனவும், வாகனத்தின் உரிமையாளர் அல்லாத அவரது துணைவர் அல்லது பிள்ளையும் வாகனத்தை ஓட்டலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.










