
ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 சிறுவர்கள் பலி
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அவர்களில் 18 சிறார்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதான ஒருவரினால் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தரங்களில் கல்வி கற்ற 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில், சந்தேகநபர் கொல்லப்பட்டார்.
அவர், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமைக்கான நோக்கம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.