ஆய்வுக்குட்படுத்தபடவுள்ள கண் சொட்டு மருந்து
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்ட ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சொட்டு மருந்து 2021ம் ஆண்டு முதல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் அந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய நோயாளர்கள் சிலர் பல்வேறுப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசெலோன் என்ற கண் சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்