
ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கசக்ஸ்தான் இணையும் -டொனால்ட் ட்ரம்ப்
இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்க கசக்ஸ்தான் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் இணையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கசக்ஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
கசக்ஸ்தானும் இஸ்ரேலும் 1992 முதல் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தாலும், இந்த நடவடிக்கை ஆபிரகாம் ஒப்பந்தங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு அடையாளச் செயலாகக் கருதப்படுகிறது.
இது பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .
