‘ஆன்டி’ என அழைத்ததால் கோபமடைந்த பெண்:ஏடிஎம் காவலாளியின் நிலை

இந்தியாவின் பெங்களூருவில் 19 ஆம் திகதி அஸ்வினி என்ற பெண் தன்னை ஆன்டி என்று அழைத்தமைக்காக ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பினால் தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருஐகயில்,

குறித்த பெண் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்த பிறகு கதவின் அருகே அந்தப் பெண் நின்றிருந்திருக்கிறார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தின் காவலாளியான கிருஷ்ணய்யா என்பவர் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அப்படிச் சொல்லும் போது ஆன்ட்டி என அழைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கிருஷ்ணய்யாவை தனது செருப்பால் தாக்கி வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

சம்பவத்தின் போது அருகில் நின்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பெண்ணின் மீது பாதிக்கப்பட்ட காவலாளி கிருஷ்ணய்யாவும் புகார் வழங்கியதையடுத்து பொலிஸார் பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.