ஆண், பெண்ணாக ஒட்டி பிறந்த இரட்டையர்கள்

அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டிப் பிறந்த லோரி-ஜார்ஜ் சேப்பல் என்னும் இரட்டையர்களில் பெண்னான லோரி தான் படும் சங்கடங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தனது சகோதரன் தன்னுடன் ஒட்டி இருக்கும் போது தான் காதலனுடன் தனிமையில் பேச முடியாத நிலை ஏற்பட்டு மிகவும் சங்கடமான சூழலை தான் சந்திப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் லோரி மற்றும் ஜார்ஜ் ஷாப்பல் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். அவர்களின் தலைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட பிறந்தவர்கள். அவர்களின் முன் மடல் திசுக்களில் 30 சதவீதம் மற்றும் முக்கியமான இரத்த திசுக்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பிரிக்க இயலாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவ அறிவியல் என்றாவது ஒரு நாள் அவர்களை தனித்தனியாக வாழ அனுமதிக்கும் என்று இருவரும் இன்னும் நம்புகிறார்கள். உடன் பிறந்த குழந்தைகள் இருவரும் பிறந்தபோது அவர்கள் பெண் குழந்தைகள் மட்டுமே. ஒருவரின் பெயர் லோரி, மற்றவர் டோரி. ஆனால் 2007ம் ஆண்டில், டோரி உள்ளே இருந்தது ஒரு ஆண் என்பது தெரியவந்தது. இதையடுத்து டோரியின் பெயர் ஜார்ஜ் என மாற்றப்பட்டது. லோரி ஒரு பெண். அவர் தன் வாழ்க்கையில் திருமண பந்தத்தில் இணைய விரும’புகிறார்.

தன்னுடன் ஒட்டிப் பிறந்துள்ள தன் சகோதரனை வைத்துக் கொண்டு தனிமையான விவகாரங்களில் ஈடுபட முடியவில்லை என்கிறார் லோரி. இதனால் லோரி தனது காதலனுடன் டேட்டிங் மற்றும் நேரத்தை செலவிடும் போது நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. லோரிக்கு 2006ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் அவரது வருங்கால கணவர் திருமணத்திற்கு 4 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார்.

அந்த சோகத்தில் இருந்து தன்னை மீட்டது தனது சகோதரன் ஜார்ஜ் தான் என்கிறார் லோரி. அதில் இருந்து விடுபட்டு லோரி மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். சகோதரருக்கு முன்னால் டேட்டிங் செய்வது அல்லது காதல் செய்வது கடினம், ஆனால் ஜார்ஜ் இந்த விஷயத்தில் மிகவும் ஆதரவாக இருப்பதாக கூறுகிறார் லோரி.

இருவரின் தலைகளும் வெவ்வேறு திசைகளில் உள்ளன. எனவே லோரி தன் காதலனை முத்தமிடும் போது, ​​ஜார்ஜ் எதையும் பார்ப்பதில்லை. இது தவிர, லோரி காதலனுடன் தனிமையில் இருக்கும் போது மிகவும் சங்கடமான சூழலை தான் எதிர்கொள்வதாக கூறுகிறார் அவர். ஆனால் ஜார்ஜ் ஒரு புத்தகத்துக்குள் மூழ்கி விடுவாராம்.

இருவருக்கும் கிட்டத்தட்ட 50 வயது. ஜார்ஜை விட லாரி ஆரோக்கியமானவர். ஆனால் ஜார்ஜால் நடக்க முடியாதுஇ அவர் சக்கர நாற்காலியில் தான் இருக்கிறார். அதை லோரி தள்ளிச் செல்கிறார். லோரியின் உயரம் 5 அடி 1 அங்குலம். ஜார்ஜ் 4 அடி 4 அங்குலம். இருவரில் ஒருவர் குளிக்க வேண்டியிருக்கும் போது, ​​அவர் தனது தலைக்கு அருகில் ஒரு முக்காடு கொண்டு வருவாராம். ஆனாலும் தினம் தினம் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம் என்கிறார் இந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்