ஆணுறை பாவிக்கவில்லையா : பாதுகாப்பற்ற உடலுறவு – ஆபத்து!
பாலியல் ரீதியாக பரவும் கோனோரியா, 2022ம் ஆண்டில் 82,592 நபர்களை பாதித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவு இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது, இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையின் படி, இங்கிலாந்தில் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளின் (STI) எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோனோரியா மற்றும் சிபிலிஸ் வரலாறு காணாத அளவு அதிக அளவு எண்ணிக்கையிலான நபர்களை பாதித்திருப்பதாக கூறுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பாதுகாப்பற்ற உடலுறவுதான்.
கடந்த 2022ம் ஆண்டில் மட்டுமே 82,592 நபர்கள் கோனோரியாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம். மேலும் கோனோரியாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து பெறப்பட்ட ஆண்டுவாரியான எண்ணிக்கையில் இதுவே அதிகமான எண்ணிக்கை என்று UKHSA கூறுகிறது.
மேக நோய் என்ற சிபிலிஸ் தொற்றைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8,692. இது 15 சதவீத அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 1948ற்கு பிறகான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் வசிக்கும் நபர்களில் மட்டுமே 392,453 நபர்கள் பாலியல் ரீதியாக பரவும் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இது கிட்டத்தட்ட 25 சதவீத அதிகரிப்பாகும்.
2020ம் ஆண்டில் கொரோனா காரணமாக நடைமுறைபடுத்தப்பட்ட லாக்டவுனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் குறைந்த வண்ணம் இருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை 2021 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
15 வயது தொடக்கம் 24 வயதிலான இளைஞர்கள் இடையே அதிக அளவு பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோனோரியா எல்லா வயதினரிடையேயும் அதிகமாக பரவி வருகிறது. சிபிலிஸ் தொற்று திருநங்கை, திருநம்பிகள், பை-செக்ஸுவல் அல்லது ஆணுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் போன்ற அனைவரிடமும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளதாக UK உடல் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
பாலியல் ரீதியாக பரவும் நோய்களிலிருந்து காத்துக் கொள்வதற்கான சிறந்த வழி காண்டம் பயன்படுத்துவது தான் என்றும்இ நல்ல பாலியல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் வழக்கங்களை பின்பற்றுவதும் ஆகும் என ருமு ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி சுட்டிக்காட்டியது. உடலுறவுக்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதல் பாலியல் தொற்றுகளில் இருந்தும் தப்பிக்க உதவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்