ஆட்டோவில் ஏறவிட்டால் இப்படியும் நடக்கும்!

இந்தியா – கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்  ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணத்தை கேட்டதால் ஆட்டோ வேண்டாம் என கூறிய பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு நேர்ந்த இந்த பாதிப்பை ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் அதிகாலை நேரத்தில் காத்திருக்கும் போது ஆட்டோ வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரிடம் இவர் பேரம் பேசிய நிலையில், அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பயணி சொன்ன கட்டணத்தை விட கூடுதல் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தனக்கு ஆட்டோ வேண்டாம், வேறு வாகனம் பிடித்து செல்கிறேன் என இவர் கூறியதாக தெரிகிறது. இது ஆட்டோ ஓட்டுநரை ஆத்திரப்படுத்தியுள்ளது. பயணி ஆட்டோ நின்ற இடத்தில் விலகி நடைபாதையில் நடந்து போன நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து வேகமாக வந்து அந்த பயணி மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

ட்விட்டரில் இவர் டியோவை பதிவேற்றம் செய்த நிலையில்இ பெங்களூரு பொலிஸார் அவரை தொடர்பு கொள்ள முயற்சி நடத்தி வருகிறது. அவர் ஆட்டோ ஓட்டுநர் மீது முறைப்படி புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்