ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

♻ஆட்டு ஈரலில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, தாமிரம், இரும்புச்சத்துக்கள் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா

♻கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது இதனை உட்கொண்டு வருவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும், இதனால் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

♻ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடியது, புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் ரத்தசோகையை குணப்படுத்துகிறது.

ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா

♻இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடல் தசைகளை வலிமையடைய செய்வதுடன், எலும்புகளை பலப்படுத்துகிறது.

♻உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஆட்டு ஈரலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.

♻அதுமட்டுமின்றி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் சோர்வை போக்கும், மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

♻இவ்வாறு பல ஊட்டச்சத்துகளை அள்ளித்தரும் ஆட்டு ஈரல் கிரேவி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டு ஈரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா

தேவையான பொருட்கள்

💠ஆட்டு ஈரல் – 1/4 கிலோ

💠வெங்காயம்- 2 (நீளவாக்கில் நறுக்கியது)

💠தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)

💠இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன்

💠மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

💠மிளகாய் தூள்- கால் டீஸ்பூன்

💠சீரகத்தூள், மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்

💠எண்ணெய் – 2 தேக்கரண்டி

💠கிராம்பு, ஏலக்காய், பட்டை- 2

💠கொத்தமல்லி இலைகள்- தேவையான அளவு

செய்முறை

💢பாத்திரத்தை அடுப்பில் வைத்ததும் எண்ணெய் ஊற்றி, பட்டை, கராம்பு, ஏலக்காய், சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

💢எண்ணெய் பிரிந்து வரும் பக்குவத்தில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மசாலா தூளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும், இதனுடன் உப்பு சேர்த்து ஈரலை சேர்க்கவும்.

💢சிறிது தண்ணீர் சேர்த்து ஈரலை நன்றாக வேகவிடவும், கடைசியாக மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகள் சேர்த்தால் சுவையான ஆட்டு ஈரல் கிரேவி தயாராகிவிடும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்