
ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி : இலங்கைக்கு தங்கப் பதக்கம்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ரீ44, 100 மீற்றர் போட்டியில் இலங்கை வீரர் நுவன் இந்திக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் போட்டித் தூரத்தை 11.63 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.
இந்த ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவும், வெண்கலப் பதக்கத்தை சீனாவும் வென்றுள்ளன.
