அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூலாய்வு செய்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்தியதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நூல் வெளியீடு, விவரணப்படம், நினைவேந்தல் பாடல், துஆப்பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், எம்.எஸ் அப்துல் வாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் தௌபீக், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர், என பலர் கலந்துகொண்டனர்.