அவுஸ்திரேலியாவில் கர்நாடக இசை குறுங்கச்சேரியில் திறமையை வெளிப்படுத்திய சிறுவன்
அவுஸ்திரேலியா விக்டோரியா மெல்பேர்ன் வர்ஷா இசைக்கல்லூரியின் கர்நாடக இசைக்குறுங்கச்சேரி அண்மையில் மெல்பேர்ன் நகரில் நிகழ்ந்தது.
விக்டோரியா சான்ட்லெர் சமூக நிலைய மண்டபத்தில் மெல்பேர்ன் வர்ஷா இசைக்கல்லூரியின் மாணவனான நிஷித் ராஜன்பாபுவின் கர்நாடக இசை குறுங்கச்சேரி இடம்பெற்றது.
நான்காவது வயதில் இருந்து பத்து வருடங்களாக கர்நாடக சங்கீதம் பயின்று வரும் இளம் பாடகர் நிஷித் ராஜன்பாபு பல மேடைகளில் பாடியிருக்கிறார். பல இசைப்போட்டிகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடி வெற்றியும் பாராட்டுதல்களையும் வெகுவாகப்பெற்றுள்ளார். இளம் கர்நாடக இசைக்கலைஞன் நிஷித், இலங்கை வடமராட்சியைச் சேர்ந்த ஆனந்தசிவம் ராஜன்பாபு அலங்ருதா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
எமது இசைப்பாரம்பரியத்தை அவுஸ்திரேலியா மண்ணில் வர்ஷா இசைக்கல்லூரி வளர்த்து வருகின்றது.
குறுங்கச்சேரியில் நிஷித் வியத்தகு முறையில் கர்நாடக சங்கீதத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை தமது பாடல்களால் பரவசப்படுத்தினார்.