அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இலங்கை யாழ் பயணி விமானத்தில் உயிரிழந்துள்ளார்

அவுஸ்ரேலியா-மெல்பேர்னில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த யாழ் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் (வயது 75) எனவும் இவர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், விமான நிலைய கடமை அதிகாரி ஒருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் விமானம் மெல்பேர்னுக்கு மீண்டும் திரும்பாமல் கட்டுநாயக்காவிற்கு செல்ல தீர்மானித்த நிலையில் சடலம் இலங்கை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்