Last updated on November 8th, 2022 at 05:55 pm

அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய தொழில் | Minnal 24 News %

அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய தொழில்

நாட்டில் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடுகள் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக காணப்படும் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மடுக்கரை, செம்மண் தீவு, கருக்காய் குளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மட்பாண்ட தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருளுக்கான விலையேற்றம் காரணமாக சட்டி, பானை, அடுப்பு, சிட்டி விளக்குகள் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்பு போல் வியாபாரிகள் எவரும் அவர்களிடம் வந்து பெற்றுக் கொள்வது இல்லை என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதனால் தூர பிரதேசங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்று கொடுத்தால் செலவு இரட்டிப்பாகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் தேங்கி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

எனவே, இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு எரிபொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் தடையில்லாமல் விலை குறைவாக கிடைத்தால் மட்டுமே எமது பாரம்பரிய தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியும் .

மேலும், பலர் இந்த தொழிலில் இருந்து விலகி வேறு தொழிலுக்குச் சென்றுள்ளார்கள்.

தங்களது காலத்தின் பின்பு தமிழர்களின் பாரம்பரிய தொழிலாக காணப்படும் இந்த மண்பாண்ட தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஆட்கள் இல்லை.

காலப்போக்கில் மன்னார் மாவட்டத்தில் இந்த மட்பாண்ட தொழில் அழிந்து போகக் கூடும் என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.