
அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய சர்வதேச சிறுவர் தினம்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட காரைதீவுக் கோட்ட கமு/கமு/மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் வெகு விமர்சியாக அதிபர் வீ. முஹம்மட் ஸம்ஸம் தலைமையில் கல்லூரியின் முகாமைத்துவக் குழுவினரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளரும், கல்லூரியின் PSI இணைப்பாளருமான அல்ஹாஜ் மெளலவி ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் (ஹாமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் கல்லூரியின் பிரதியதிபர்கள், உதவியதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர்.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

