அல்சர் அறிகுறிகள்

அல்சர் அறிகுறிகள்

அல்சர் அறிகுறிகள்

🟣வயிற்று புண் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும். இந்த பிரச்சனையால் ஆண்டுக்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக நமது வயிற்றில் ஒரு பாதுக்காப்பு அடுக்கு உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுக்கிறது. இதனால் வயிற்றில் புண்கள் ஏற்படுகிறது.

🟣பெரும்பாலும் NSAID களை அதிக காலம் பயன்படுத்துபவர்கள், இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதில் பல புண்களை சரி செய்ய முடியும். இப்போது இந்த புண் ஏற்படுவதற்கான அறிகுறிகளை பார்ப்போம்.

🔺அல்சர் புண்களின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று என்றால் அது அடி வயிற்றில் ஏற்படும் கடுமையான வலி எனலாம். செரிமான மண்டலத்தின் மேல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் புண் ஏற்படலாம்.

🔺இரைப்பை குழாயில் இருந்து இரத்தம் கசிதல் என்பது பல வகையான உடல் சம்பந்த பிரச்சனையை குறிக்கிறது. இந்த இரத்த கசிதலானது மேல் வயிற்று வலியுடன் சேர்ந்து ஏற்பட்டால் அது வயிற்று புண்களுக்கான அறிகுறியாகும்.

🔺வயிற்றில் ஏற்படும் புண்களுக்கான அறிகுறிகளில் ஒன்று குமட்டல் உணர்வு ஆகும்.

🔺குமட்டலானது சில சமயங்களில் மிகவும் தீவிரமாகி அது உங்களுக்கு வாந்தியை ஏற்படுத்தும். இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அல்சர் என்று அர்த்தம்.

🔺வயிற்று பகுதியானது வீக்கம் அடைந்திருப்பது போன்று நீங்கள் அறிந்தால் வாயு சம்பந்தமான பிரச்சனைகளாக கூட இருக்கலாம். இது மட்டுமல்லாமல் வயிறு புண்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

🔺இரத்தப்போக்கு மேல் வயிற்று வலியுடன் சேர்ந்து ஏற்பட்டால் அது வயிற்று புண்களுக்கான அறிகுறிகளாகும்.

🔺அல்சர் நோயினால் வரக்கூடிய புண் பசியினை கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு பசிக்கும் நேரத்தில் வயிற்று பகுதியில் எரிச்சலும், கசப்பு தன்மையை உணர்கின்றனர். இந்த வலியானது உணவு உண்ட பிறகு குறைந்துவிடும். பசி வரும்போது மட்டும் இந்த வலி ஏற்படுவதால் இதனை வைத்து அல்சர் நோயை கண்டறியலாம்.

🔺வயிற்றில் புண்களை கொண்ட நோயாளிகள் மார்பு வலியை சந்திக்கின்றனர். இது இதயமற்ற மார்பு வலி என அழைக்கப்படுகிறது. இது மாரடைப்பு அல்லது இதய நோயால் ஏற்படாமல் புண்களால் ஏற்படும் வலியை குறிக்கிறது.

🔺உங்களின் எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்றாகும்.

🔺அல்சர் அறிகுறியாக இருந்தால் உடல் எடையானது குறைந்து காணப்படும். அதிகமாக பசி எடுக்காமல் இருப்பதை வைத்து நீங்கள் இதனை அறிந்துகொள்ளலாம். உணவு உட்கொள்ளும் போது அசெளகரியமாக உங்களை உணர செய்யும்.

🔺ஏப்பம் என்பது வயிற்றில் உள்ள புண்களின் பொதுவான அறிகுறியாகும். ஏப்பமானது வழக்கத்தினை விட அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது மிகவும் நல்லது.

🔺அல்சரினால் ஏற்படக்கூடிய இந்த வலியானது வயிற்றின் மேல் அல்லது நடுப்பகுதியில் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் முதுகு பகுதிகளில் வலி உண்டாகிறது. இந்த அறிகுறிகளை வைத்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

🔺வயிற்று பகுதியானது வீக்கம் அடைந்திருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் அது அல்சருக்குரிய அறிகுறியாகும்.

அல்சர் அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்