அலி சாஹீர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹீர் மௌலானா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து அவர், தமது ஆதரவை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தானமையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹீர் மௌலானா பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்