அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றத்தில் மாணவர் சந்தை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றத்தில் நேற்று மாணவர்களால் சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முத்தமிழ் மாணவர் மன்றப் பொதுச் செயலாளர் இளங்கோவன் ரிஷிகவி மற்றும் பொருளாளர் தினேஷ்குமார் சாத்விகா தலைமையில், திரன்சார் அபிவிருத்தித் துறைச் செயலாளர் சித்தார்த்தன் லிதுர்ஷன், சுகாதாரத் துறைச் செயலாளர் இளங்கோவன் டிலுக்ஷாயினி, செயலாற்றுக் குழு உறுப்பினர் நிஷாந்தன் பவிநயா மற்றும் நிலோஜ் வர்ஷனா ஆகியோரால் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெரும் வருமானம் மாணவர் மன்றச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும்.

அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் அஜித் குமார், நிர்வாகச் செயலாளர் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோரால் இந்த சந்தையானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்