
அரிசி கொள்கலன் வண்டி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் தங்கோவிட்ட ஹலகலைக்கு அருகில் அரிசி ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மிதிரிகிரியில் இருந்து களுத்துறைக்கு அரிசி ஏற்றிச் சென்ற போது சாரதி தூங்கியதால் காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் பொலிஸாரின் தலையீட்டில் கையிருப்பு அரிசியை வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விபத்தில் காயமடைந்த உதவியாளர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
