அரச வைத்தியசாலைகளில் 150 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
அரச வைத்தியசாலைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி மற்றும் கண் நோய்களுக்கான மருந்து ஆகிய மருந்து வகைகளும் அடங்குவதாக, சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்க தரமான மருந்து வகைகளைத் தொடர்ச்சியாக விநியோகிப்பது அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .
மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள், இரசாயன பரிசோதனைகளுக்கு அவசியமான உபகரணங்கள், கதிரியல் பரிசோதனைக்கான உபகரணங்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் பெற்றுத்தருவது அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பு எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் தற்போது மருத்துவமனைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
