அரச பேருந்து மீது கல்வீச்சு

காரில் சென்ற இனந்தெரியாத இருவர் வீதியில் பயணித்த பேருந்தின் மீது கல் எறிந்து தாக்கியதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து, பேருந்து சாரதி காயமடைந்த சம்பவம் வெலிகந்த பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இதன்போது, பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து சிதறிய நிலையில், கண்ணாடித் துண்டுகள் தலையில் குத்தி பஸ் சாரதி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி வெலிகந்த அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்