அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கு (Constitutional Council) மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், பின்வரும் மூவர் அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

• பேராசிரியர் வசந்தா செனவிரத்ன
• ஒஸ்டின் பெனாண்டோ
• ரஞ்சித் ஆரியரத்ன

அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜம் மற்றும் தினேஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 16ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய நியமனங்கள் குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.