அரசாங்கம் ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதாக கூறி விலை ஏற்றங்களை செய்து வருகிறது

 

ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி,நாட்டின் சட்டத்தையும்,அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால் ஸ்மார்ட் நாடொன்று உருவாகாது என்றும், இதன் காரணமாக பாடசாலை செல்லும் பிள்ளைகளின் போசாக்கு பற்றாக்குறையினால் அவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் உணவை வழங்குவதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் எனவும், இது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை பலவீனப்படுத்துவதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஓராண்டில் முறைகேடாக 3 தடவை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணங்களை அதிகரித்து விட்டு,குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பெரும் வீராப்பு பேசி வருகிறார் என்றும், எவ்வளவு தான் நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்வதாக கூறுவதை அனுமதிக்க முடியாது என்றும்,இது ஸ்மார்ட் நாட்டுக்கான பண்பல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறும் ஸ்மார்ட் நாட்டில் விலை அதிகரிப்பும் விற்பனையுமே காணப்படுவதாகவும்,பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தைக் கூட விற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும், இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கூட பறி போயுள்ளதாகவும்,நாட்டில் நடப்பது விலை அதிகரிப்பும் விற்பனையும்தான் என்றும்,இது வரம்பற்ற அசௌகரியத்தையும் அழுத்தத்தையும் தோற்றுவித்துள்ளதாகவும்,
இதனால் நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இலங்கையை உருவாக்கும் பயணத்தை வலுப்படுத்தும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 37 ஆவது ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் இன்று  செவ்வாய்க்கிழமை வட கொழும்பு டி லா சால் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.