அயடின் கலந்த உப்பு பையில் கல் : எச்சரிக்கை!

நாட்டில் விற்பனையாகும் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பில் கற்கள் கலந்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்டது, பாவனைக்கு முன் உப்பை கழுவ வேண்டாம், அயடின் கலந்த தூய்மையான உப்பு”, இதுபோன்ற வசனங்கள் எழுதப்பட்டு பொதி செய்யப்பட்டு உப்பு விற்பனையாகின்றது.

இவ்வாறான பையினுள் உள்ள உப்பினை எடுத்து நீரில் இட்டு கழுவிய போது உப்பு முழுவதுமாக கரைந்து விட்ட பின் கரைசலினுள் கற்கள் எஞ்சுவதாக பாவனையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆகவே மக்கள் கடைகளில் உப்பை கொள்வனவு செய்யும் போதும் உப்பை சமையலில் பாவிக்கும் போதும் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்