
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை வேளையில் மழை
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமேல் மாகாணத்திலும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
