
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றது
அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை 13 ஆம் நாள் விநாயகபுரம் பொதுமக்களின் திருவிழா இடம்பெற்றது.
அதன்படி விநாயகபுரம் பொதுமக்கள் பூஜை பொருட்களுடன் கோவிலை நோக்கி சென்ற போது முருகன் ஆலய நிர்வாகத்தை சார்ந்தவர்கள் மற்றும் கோவிலில் நின்றிருந்தவர்கள் பூஜை பொருட்களினையும் விநாயகபுரம் வாழ் பொது மக்களையும் ஆலயத்தினுள் செல்ல விடாது தடுத்தனர்.
மேலும் வாகன சாரதிகளை தாக்கி பூஜை இடம்பெறாது விநாயகபுரம் பொது மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இன்று புதன்கிழமை விநாயகபுரம் மக்களால் இச்சம்பவம் குறித்து திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.