அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றி சென்ற லொறி விபத்து

-பதுளை நிருபர்-

பதுளை வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற குறித்த லொறியில் மூன்று பேர் பயணித்ததாகவும்,  சாரதி  வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறி கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி  விபத்துக்குள்ளானதின் குறித்த வீதியின் போக்குவரத்து ஒற்றை வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், அடம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சஞ்சீவ சேந்தநாயக்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்